மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீஸ் உயர் பதவியான கூடுதல் தலைமை இயக்குநர் பதவியில் இருக்கும் புருஷோத்தம் சர்மா என்பவர் தன் மனைவியை அடித்து உதைத்த வீடியோ வைரலானது. இந்நிலையில் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
புருஷோத்தம் சர்மா தன் மனைவியை அடிக்கும் காட்சியும் அங்கு இரண்டு பேர் அவரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆனால், தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் புருஷோத்தம் சர்மா, ''இது குடும்பத் தகராறு. என்னை என் மனைவி சந்தேகித்துக் கண்காணிக்கிறார். பின் தொடர்கிறார். வீட்டில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.
நான் அவதூறாகப் பேசியிருந்தால், நடந்திருந்தால் என் மனைவி புகார் அளித்திருப்பார். இது குடும்பச் சண்டை, குற்றம் கிடையாது. நான் வன்முறையாளனும் அல்ல கிரிமினலும் அல்ல. நான் இதை அனுபவிக்க வேண்டும் என்பது என் துரதிர்ஷ்டமே.
2008-ல் ஒருமுறை எனக்கு எதிராக என் மனைவி புகார் எழுப்பினார். ஆனால், என் வீட்டில்தான் இருக்கிறார்'' என்று புருஷோத்தம் சர்மா தெரிவித்தார்.
ஆனால், மாநிலத்தின் மகளிர் உரிமைச் செயற்பாட்டாளர் வர்ஷா மிஸ்ரா கூறும்போது, “பெண்களை அடிமைகளாகவும் பொருளாகவும் பார்க்கின்றனர். ஒரு உயரதிகாரியிடமிருந்து மக்கள் ஊக்கம் பெற வேண்டுமே தவிர இப்படி மனைவியை அடிப்பது போன்ற நடத்தையை ஏற்க மாட்டார்கள்.
கணவன் - மனைவிக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் பேசித் தீர்க்கலாம். இந்த மாதிரி நடத்தையை ஏற்க முடியாது, அவர் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கலாம். ஆனால், அதற்காக விட்டுவிட முடியாது, கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago