பெங்களூரு கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ

By செய்திப்பிரிவு

பெங்களூர்: சர்ச்சைக்குரிய முகநூல் பதிவின் காரணமாக பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இரவு கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, இவ்வழக்கு என்ஐஏ அமைப்புக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, கடந்த சில தினங்களாக பெங்களூருவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஆயுதங்கள், இரும்புக் கம்பிகள், துப்பாக்கி தோட்டாக்கள், டிஜிட்டல் கருவிகள், இஸ்லாமிய அமைப்புக்கு ஆதரவான ஆவணங்கள் சிக்கின.

இந்த சோதனையின் அடிப்படையில், தனியார் வங்கியில் பணியாற்றிய சையத் சாதிக் அலி (44) என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். சதித் திட்டம் தீட்டி கலவரத்தை தூண்டிவிட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு இவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்