இந்தியா - ஜப்பான் ஆகிய நாடுகள் 5-ஜி தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் புதிய பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
குவாட் உத்திசார் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்டநாடுகளுடன் இணைந்து 5-ஜி மற்றும் 5-ஜி பிளஸ் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது. ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
5-ஜி மற்றும் 5-ஜி பிளஸ் தொழில்நுட்பத்துடன் 3-ஜிபிபி தொழில்நுட்பத்தையும் ஜப்பானிடம் இருந்து இந்தியா எதிர்நோக்குகிறது. இது தொலைத் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தர நிறுவனமாகும். இது சர்வதேச அளவிலான கூட்டமைப்பாகும். கிராமப்புறத்தில் சர்வதேச அளவில் தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டுதலை இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் இந்த கூட்டமைப்பில் இணைந்து சர்வதேச தரத்திலான வழிகாட்டுதலை பின்பற்ற முடிவு செய்துள்ளது. இதில் 3-ஜிபிபி தரமானது. பெரும்பாலும் சீன தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உருவாக்கியவையாகும்.
நேற்று முன்தினம் ஜப்பானின்புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள யோஷிஹிடே சுகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குவாட் நாடுகளுடன் இந்தியாவும் இணைய வேண்டும் என்று சுகா ஆர்வம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. லடாக் பிராந்தியத்தில் படைகளை குவித்து இந்தியாவில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியதைப் போன்று ஜப்பானின் சென்காகு தீவு பகுதியில் சீனா படைகளைக் குவித்து ஜப்பானுக்கு அதிர்ச்சியளித்தது. இதனால் இந்தியாவும், ஜப்பானும் பரஸ்பரம் உறவை வலுப்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டுகின்றன.
கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இந்தியாவும், ஜப்பானும் பரஸ்பரம் சேவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்படி ஜப்பான் தற்காப்பு படைகள் மற்றும் இந்திய ராணுவ படைகள் தங்களது சப்ளை போக்குவரத்து பணிகளை பகிர்ந்து கொள்ள வழியேற்படுத்தியுள்ளது. தற்போது குவாட் நாடுகளில் இந்தியாவும் சேர்ந்தால் நவம்பர் மாதம் நடைபெற உள்ள கடற்படை கூட்டு பயிற்சியில் ஜப்பானுடன், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து மேற்கொள்ளும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. ஜப்பானின் சென்காகு தீவில் சீன படைகள் குவிக்கப்பட்டதால், ஜப்பான் அரசு ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியஅவசியமும் தற்போது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago