இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேருக்குக் கரோனா தொற்று பாதிக்கப்பட்டது, மேலும் 1089 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரேநாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட அதிகம் என சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
தற்போது கரோனா சிகிச்சையில் 9 லட்சத்து 60 ஆயிரத்து 969 பேர் இருந்து வருகின்றனர், 48 லட்சத்து 49 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர்.
59 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்து 3 ஆயிரத்து 932 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1089 மேலும் அதிகரித்ததையடுத்து மொத்தமாக இதுவரை 93,379 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்து 49 ஆயிரத்து 584 ஆக உள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 82.14% ஆக உள்ளது.
இறப்பு விகிதம் 1.58% ஆக தொடர்கிறது.
நாட்டில் தற்போது 9 லட்சத்து 60 ஆயிரத்து 969 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர், இது மொத்த வைரஸ் பாதிப்பில் 16.28% ஆக உள்ளது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தமாக இதுநாள் வரை 7 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 975 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 25ம் தேதியான நேற்று மட்டும் 13 லட்சத்து 41 ஆயிரத்து 535 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 1089 பேர் கரோனாவுக்கு பலியானதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 416 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 72, உ.பி.யில் 84, மே.வங்கத்தில் 59, பஞ்சாபில் 68, கர்நாடகாவில் 86, ஆந்திராவில் 48, ம.பி.யில் 30 பேர் அதிகபட்சமாக பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago