‘‘கலை உலகம் வெறுமை அடைந்திருக்கிறது’’ - எஸ்.பி.பி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

By செய்திப்பிரிவு

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் எதிர்பாராத திடீர் மறைவால் நமது கலை உலகம் வெறுமை அடைந்திருக்கிறது. நாடுமுழுவதும் வீட்டில் ஒருவராகத் திகழ்ந்த இவரது மெல்லிசைக் குரலும், இசையும் பல்லாண்டுகளாக ரசிகர்களை மெய்மறக்க வைத்திருந்தது. இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பிரதமர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்