கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை 6வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட்-19 சிகிச்சையில் பின்பற்றப்படும் யுக்திகள் காரணமாக இந்தியாவில் குணமடைபவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 6 நாட்களாக, புதிதாக தொற்று ஏற்படுபவர்களை விட, குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் பிரதமர் நேற்று நடந்த ஆய்வு கூட்டித்தில் சுட்டியகாட்டியபடி, தீவிர பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதால், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 87,374 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 86,508 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 46.7 லட்சமாக (46,74,987) உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 81.55% -மாக உள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிகிச்சை பெறுபவர்களை விட (9,66,382), 37 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் அளவு, மொத்த பாதிக்கப்பட்டவர்களில் 16.86% மாக உள்ளது. இந்த அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago