காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரான 370 பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிரத்து செய்யப்பட்டது. அதன்பின் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
காஷ்மீரில் தற்போது உருது மற்றும் காஷ்மீரி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த வால்மீகி உள்ளிட்ட சமூகத்தினர் காஷ்மீரில் குடியேற ஒப்புதல் அளித்து அண்மையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த பெரிய நடவடிக்கையாக அலுவல் மொழிகள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
‘‘ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு ஒப்புதல் வழங்கும் மசோதாவுக்கு மக்களவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago