கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் குணமடைபவர்கள் எண்ணிக்கையில், இந்தியா இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் (1,01,468) குணமடைந்துள்ளனர்.மற்றொரு முக்கிய சாதனையாக, ஒரே நாளில் அதிகளவில் குணமடைவது கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நீடிக்கிறது.
இத்துடன், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்தை(44,97,867) நெருங்கிறது. இதன் மூலம் குணமடைவோர் வீதம் 80.86% எட்டியுள்ளது.
குணமடைந்தவர்களில் 79% பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, டெல்லி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
குணமடைபவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னேறுகிறது. அங்க புதிதாக 32,000 பேர் (31.5%) குணமடைந்துள்ளனர். ஆந்திராவிலும், ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
குணமடைவோர் எண்ணிக்கையில், இந்தியாவின் சாதனை, உலகளவில் இந்தியாவை முதல் இடத்தில் வைத்துள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு உதவ, பல குழுக்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. உயர்நிலை ஆலோசனை தொடர்ந்து நடந்த வருவது, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளால், கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கிறது மற்றும் இறப்பு வீதம் குறைவாக இருப்பதை பராமரிக்கிறது. தற்போது இறப்பு வீதம் 1.59%- ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago