உலகளாவிய கோவிட்19 குணமடைதல்களில் அமெரிக்காவை இந்தியா முந்தி முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கரோனாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இந்தியா, தொற்றின் பரவலை குறைப்பதற்கும், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறப்புகளை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் விளைவாக, உலகளாவிய கோவிட்19 குணமடைதல்களில் அமெரிக்காவை இந்தியா முந்தி முதலிடத்தில் உள்ளது. மொத்த குணமடைதல்கள் 42 லட்சத்தை தாண்டியுள்ளது.
» ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி: தேர்வு குழு கூட்டம் தொடக்கம்
» கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக சுங்கத்துறை இரு வழக்குகள் பதிவு
மத்திய அரசு தலைமையிலான கவனம் மிகுந்த, திட்டமிட்ட மற்றும் திறன்மிகு நடவடிக்கைகள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை நடத்தப்பட்டு, பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு, சரியான கண்காணிப்பு, தடமறிதல் மற்றும் உயர்தர சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்த உலகளாவிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 42,08,431 ஆக தற்போது உள்ள நிலையில், உலகின் ஒட்டுமொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இது 19 சதவீதம் ஆகும்.
தேசிய குணமடைதல் விகிதம் தற்போது 80 சதவீதத்தை (79.28%) நெருங்கியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்கள் 90 சதவீதம் பேர் 16 மாநிலங்களில் உள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago