குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சிவில் மருத்துவமனை ஒன்றில் ஊழியர் ஒருவரால் கரோனா நோயாளி தாக்கப்பட்டதாக வைரல் வீடியோ வெளியானது, அந்த நோயாளி வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிவில் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பங்கஜ் பக் என்பவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “அந்த நோயாளிக்கு ஹிஸ்டீரியா ஏற்பட்டு ஐவி டியூபை அகற்ற முயற்சி செய்தார். அவர் தன்னையும் பிற நோயாளிகளையும் காயப்படுத்த முயற்சி செய்தார். பிறகு அவர் கட்டுப்படுத்தப்பட்டார்.” என்றார்.
2 வாரங்களுக்கு முன்பாக வைரலான வீடியோவில் பிபிஇ கிட்டில் இருந்த மருத்துவ ஊழியர் ஒருவர் கரோனா நோயாளியை தாக்கியதால் அவர் கீழே விழுந்து கிடந்தது தெரிந்தது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அந்த நோயாளி, ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று கூறியது.
மேலும் அவர் தன்னையும் பிறரையும் காயப்படுத்துவதை தவிர்க்க கட்டுப்படுத்தப்பட்டாரே தவிர தாக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அந்த நோயாளி வெள்ளிக்கிழமை கரோனாவுக்குப் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேல் விவரங்கள்,விரிவான தகவல்கள் இனிமேல்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago