தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டை மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் கோயில் கட்டி தினமும் வழிபட்டு வருகிறார்.
தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டை மாவட்டம், ஹுசூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். பிரதமர் மோடியின் உரைகளை தான் வசிக்கும் பகுதியில் தனி ஆளாக பிரச்சாரம் செய்கிறார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு மோடியை போன்ற தலைவர் தான் தேவை என்பது இவரது வாதம். தான் பாஜகவின் தொண்டன் என்பதை விட பிரதமர் மோடியின் பக்தன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார்.
பிரதமர் மீதான அன்பு இவரை தனது வீட்டுக்கு அருகில் சிறு கோயில் கட்டும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இக்கோயில் திறந்து வைக்கப்பட்டது. இக்கோயிலில் பிரதமர் மோடியின் உருவப்படம் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை இரு வேளையும் பூஜை செய்கிறார் சதீஷ். இதனை அப்பகுதியில் உள்ள பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago