விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு இரண்டாவது உத்கிருஷ்ட் சன்ஸ்தான் விஸ்வகர்மா விருதை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வழங்கினார்
அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு 14 பிரிவுகளில் இரண்டாவது உத்கிருஷ்ட் சன்ஸ்தான் விஸ்வகர்மா விருதை விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் முறையில் வழங்கினார்.
900-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த வருட விருதுக்காக தங்களை பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், 14 பிரிவுகளில் 34 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
புனே பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த பிரிவில் முதல் பரிசை வென்றது. 2019-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்து சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளது.
விழாவில் பேசிய அமைச்சர், "தொழிற்கல்வி சமூகம் தன்னுடைய பரந்த அறிவின் மூலமும், போதுமான வளங்களின் மூலமும் சமுதாயத்திற்கு பங்காற்றும் திறனைப் பெற்றுள்ளது. இந்த வருடம் விருதுக்கான மையக்கருவாக 'கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடுகிறது' என்பது இருந்தது. பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த பங்காற்றிய நிறுவனங்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளன," என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago