இந்தியாவில் தொடர்ந்து 2 நாட்களாக 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த இரண்டு நாட்களாக மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களை இந்தியா கண்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மிக அதிக அளவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேசிய குணமடைதல் வீதமும் தொடர்ந்து உயர்ந்து இன்று 78.64 சதவீதத்தைத் தொட்டுள்ளது.
» மூட்டு உள்வைப்புகளுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்; பொதுமக்களுக்கு ரூ 1,500 கோடி மிச்சமாகும்
நாட்டில் இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் (40,25,079) தாண்டியுள்ளது. இவை தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட 30 லட்சம் (30,15,103) அதிகம் ஆகும்.
அதிக அளவிலான குணமடைபவர்களின் எண்ணிக்கையின் காரணமாக, கடந்த 30 நாட்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா (17,559) ஐந்தில் ஒரு பங்கு குணமடைதல்களுக்கு (21.22%) காரணமாக உள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம் (10,845), கர்நாடகா
(6580), உத்திரப் பிரதேசம் (6476) மற்றும் தமிழ்நாடு (5768) ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 35.87 சதவீதம் குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago