கரோனாவினால் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை 5286 என மத்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். இவர்களில் 1,,807 பேர் உடல்கள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று மக்களவையில் இந்தியன் யூனியன் மீது முஸ்லீம் லீக்கின் தமிழக எம்.பியான கே.நவாஸ்கனியின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான எழுத்துபூர்வ பதிலை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் அளித்திருந்தார்.
தனது பதிலில் இணை அமைச்சர் வி.முரளிதரன் எழுத்துபூர்வ பதிலில் கூறியதாவது: கரோனா பரவல் துவங்கிய பின் கடந்த பிப்ரவரி 1 முதல் ஆகஸ்ட் 15 தேதி வரையில் வளகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் 5,286 இந்தியர்கள் இறந்துள்ளனர்.
இவர்களில் 1,807 பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய வெளியுறத்துறை உதவி புரிந்தது.
இறந்தவர்களில் சிலரது உடல்களுக்கான இறுதிச்சடங்குகள் அந்நாடுகளிலேயே செய்யப்பட்டுள்ளன. இதற்காக அவர்களின் குடும்பத்தார் அரசிடம் கோரியிருந்தனர்.
இப்பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து அந்நாட்டின் அதிகாரிகளிடம் பேசி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனும் இந்தியாவில் தொடர்பில் உள்ளது. இவ்வாறு இணை அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் பஹரைன், சீனா, ஈரான், ஜப்பான், குடியரசு நாடு கொரியா, குவைத், மங்கோலியா, ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இதில், மிகக்குறைவாக ஈரானில் 2 மற்றும் மிக அதிகமாக சவுதி அரேபியாவில் 2360 இறப்புகளும் பதிவாகி உள்ளன. இவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதில் மிக அதிகமாக ஐக்கிய அரசு நாடுகளில் 705 உடல்கள் உள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago