இந்தியாவில் ஒரே நாளில் மிக அதிக அளவில் 97,894 பேருக்கு கரோனா புதிதாகத் தொற்றியுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 51 லட்சத்து 18 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி பலி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,132 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 பேர் ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்து 25 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது, கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை முதல் முறையாக 10 லட்சத்தைக் கடந்தது.
கரோனா பலி விகிதம் 1.63% ஆக உள்ளது. 10 லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளனர், இது மொத்த கரோனா கேஸ்களில் 19,73% ஆகும்.
இந்தியாவில் ஆகஸ்ட் 7ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23-ல் 30 லட்சத்தையும், செப்.5ல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16-ல் 50 லட்சத்தையும் கடந்தது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தம் 6 கோடியே 5 லட்சத்து 65 ஆயிரத்து 728 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. புதனன்று மட்டுமே 11 லட்சத்து, 36 ஆயிரத்து 613 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.
நேற்று பலியான 1,132 பேர்கலில் மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 474 பேரும், உ.பி.யில் 86 பேரும், பஞ்சாபில் 78 பேரும், ஆந்திராவில் 64 பேரும், மே.வங்கத்தில் 61 பேரும், தமிழ்நாட்டில் 57 பேரும் கர்நாடகாவில் 55 பேரும், டெல்லியில் 33 பேரும் மரணமடைந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கையான 83,198 பேரில் மகாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்தில் 30 ஆயிரத்து 883 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் பலி எண்னிக்கை 8,559 ஆக உள்ளது. கர்நாடகாவில் 7,536, ஆந்திராவில் 5,105, டெல்லியில் 4,839, உ.பி.ஈல் 4,690, மேற்கு வங்கத்தில் 4,123, குஜராத்தில் 3,256, பஞ்சாபில் 2,592, ம.பி.யில் 1,844 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் 70% பேர் மரணம் ஏற்படுத்தும் பிற நோய்கள் இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.