என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கூறப்படும் ஊழல் புகார்கள் பொய்யாக கட்டமைக்கப்பட்டவை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதில் கேரள முதல்வரின் செயலாள ராக இருந்த சிவசங்கர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
மேலும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலிருந்து பரிசுப் பொருள் பெற்றதாக மாநில அமைச்சர் கே.டி. ஜலீல் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியதாவது:
என் மீதோ என் குடும்பத்தினர் மீதோ ஊழல் புகார் கூறுகிறவர்கள், இதில் உண்மை இருக்குமா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்னுடைய பொது வாழ்க்கையில் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறேன். இதனால் இத்தகைய குற்றச்சாட்டை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறமை எனக்கு உள்ளது. என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திய பாஜக மாநில தலைவர்
கே.சுரேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள இடதுசாரி முன்னணி அரசு மீது எதிர்க் கட்சிகளால்ஒரே ஒரு ஊழல் புகாரைக்கூட சுமத்த முடியவில்லை. எனவேதான், அரசியல் காரணங்களுக் காக என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகள் கட்டமைக்கப்படு கின்றன. இவ்வாறு அவர் தெரி வித்தார்.