இந்திய- அமெரிக்க பாதுகாப்பு குழுக்கள்: காணொலியில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

ராணுவ ஒத்துழைப்பு பற்றிய மெய்நிகர் கலந்துரையாடலை இந்திய-அமெரிக்க பாதுகாப்பு குழுக்கள் நடத்தின

பாதுகாப்பு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நடவடிக்கை குழுவின் பத்தாவது கூட்டம் மெய்நிகர் முறையில் நடந்தது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செயலாளர் ராஜ்குமார், அமெரிக்க பாதுகாப்பு துறையின் கொள்முதல் மற்றும் நிலைத்தன்மை துணை செயலாளர் எலென் எம் லார்ட் ஆகியோர் இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் இந்தக் கூட்டம் கோவிட்-19 காரணத்தால் இந்த தடவை மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய இரு அதிகாரிகளும் இணைந்து ஒரு ஒப்புதல் அறிக்கையில் கையெழுத்திட்டனர். "விரிவான திட்டமிடல் மற்றும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவதன் மூலம் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை நமது பேச்சுவார்த்தையின் வாயிலாக பலப்படுத்துவோம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

கடந்த முறை அக்டோபர் 2019-இல் இந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் முடிவெடுத்தவாறு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து இரு அதிகாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்