இந்தியாவுடன் ராஜ்ஜிய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது சீனாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
சீனாவில் மனித உரிமை மீறல் நடவடிக்கை மற்றும் ஆசிய நாடுகளை சார்ந்துள்ள அதன் பொருளாதாரம் குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்த நிலையில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உறவை வலுப்படுத்திக் கொள்ளப் போவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவத்தைக் குவித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு தரப்பிலும் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் பிரச்சினை முற்றிலுமாக தீரவில்லை.
இந்நிலையில், ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறும்போது, ‘‘உறுதியான சட்டங்கள் மூலம் ஒத்துழைப்பை எதிர்நோக்கவில்லை. மாறாக பரஸ்பரம் ஒத்துழைப்பை நல்க வரும் நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறோம். சுதந்திரமான செயல்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயலாற்ற விரும்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி தற்போது இந்தியா - பசிபிக் பிராந்தியங்களில் ராஜ்ஜிய உறவுகளுக்கான புதிய அணுகுமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா மட்டுமின்றி ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆசியான் நாடுகளுக்கும் ஆதரவை நீ்ட்டிக்க விரும்புவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுடன் ஜெர்மனி மிகவும் வலுவான உறவை வைத்திருந்தது. ஜெர்னியின் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் ஆண்டுக்கு ஒரு முறையாவது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு வந்தார். தற்போது ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் தனது உறவை வலுப்படுத்தும் ஜெர்மனியின் முடிவு சீனாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
சீனாவுக்கான அமெரிக்க தூதர் விலகல்
அமெரிக்கா- சீனா இடையே பனிப்போர் அதிகரித்து வரும் சூழலில், சீனாவுக்கான அமெரிக்க தூதர் டெர்ரி பிரான்ட்ஸ்டாட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர் பதவி விலகலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இவருக்குப் பதிலாக யார் நியமிக்கப்படுவார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago