அருணாச்சல பிரதேச முதல்வர்  பெமா காண்டுவுக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். சிலர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை. ஆரோக்கியமாக உள்ளேன். இருப்பினும் தொற்று பரவாமல் தடுக்கும் விதிமுறைபடியும், மற்றவர்கள் நலனை கருத்தில் கொண்டு என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்