கோப்புப் படம் 
இந்தியா

இந்திய மருத்துவ முறை, ஹோமியோபதி மசோதாக்கள்: நாடாளுமன்றம் ஒப்புதல்

செய்திப்பிரிவு

இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் மசோதா, 2020, மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் மசோதா, 2020, ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே உள்ள இந்திய மருத்துவ மத்தியக் குழு சட்டம், 1970 மற்றும் ஹோமியோபதி மருத்துவ மத்தியக் குழு சட்டம், 1973 ஆகியவற்றை இந்த இரண்டு புதிய மசோதாக்கள் மாற்றியமைக்கப்படுகிறது.

இந்த இரு மசோதக்களுக்கும் மாநிலங்களவை 2020 மார்ச் 18 அன்று ஒப்புதல் அளித்தது. பின்னர் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதால் அதனை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.

இந்தநிலையில்
இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் மசோதா, 2020, மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் மசோதா, 2020, ஆகியவை மக்களவையால் 2020 செப்டம்பர் 14 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஆயுஷ் அமைச்சகத்தின் இரண்டு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பதன் மூலம், இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கல்விக்கு புரட்சிகரமான புத்தாக்கம் கிடைக்கவிருக்கிறது.

இந்த மசோதக்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் ஆயுஷின் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாகவும்,
இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கல்விக்கு புரட்சிகரமான புத்தாக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT