இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,071 பேருக்கு பாதிக்க, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்தது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மொத்த பாதிப்பு எண்ணிககி 48 லட்சத்து, 46 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1136 ஆக அதிகரிக்க மொத்த பலி எண்ணிக்கை 79,722 ஆக மேலும் அதிகரித்துள்ளது.
ஆனால் ஆறுதல் தரும் செய்தியாக 37.8 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர், இதன்மூலம் குணமடையும் விகிதம் 78% ஆகியுள்ளது.
இறப்பு விகிதம் 1.64% ஆகக் குறைந்துள்ளது.
மொத்தம் 9,86,598 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 37 லட்சத்து 80 ஆயிரத்து 107 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 7-ல் 20 லட்சத்தைக் கடந்த பாதிப்பு ஆகஸ்ட் 23ம் தேதி 30 லட்சத்தைக் கடந்தது, செப்.5ம் தேதி 40 லட்சத்தைத் தாண்டியது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி இதுவரை மொத்தம் 5 கோடியே 72 லட்சத்து 39 ஆயிரத்து 428 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. ஞாயிறன்று மட்டும் 9,78,500 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
1136 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மரணத்தைச் சந்தித்ததில் அதிகபட்சமாக மீண்டும் மகாராஷ்டிராவில் 416 பேர் மரணமடைந்தனர். கர்நாடாகவில் 104, உ.பி.யில் 80, தமிழ்நாட்டில் 74, பஞ்சாபில் 68, ஆந்திராவில் 66, மேற்கு வங்கத்தில் 58, மத்தியப் பிரதேசத்தில் 34, டெல்லியில் 29, ஹரியணாவில் 19, அஸாம், சத்திஸ்கரில் தலா 16 பேர், புதுச்சேரி, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தலா 15 பேர், கேரளா, பிஹார், ஜம்மு காஷ்மீரில் தலா 14 பேர், ஜார்கண்ட், தெலங்கானாவில் தலா 14 பேர், உத்தராகண்டில் 12 பேர், ஒடிசாவில் 10 பேர், திரிபுராவில் 6 பேர், கோவா, இமாச்சலில் தலா 4 பேர், சிக்கிமில் 3 பேர், சண்டிகர், லடாக், மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 79,722-ல் மகாராஷ்டிரா 29,531 மரணங்களுடன் முதலிடம் வகிக்கிறது, தொடர்ந்து 2ம் இடத்தில் தமிழ்நாடு 8,381 மரணங்களுடன் நீடிக்கிறது. கர்நாடகாவில் மொத்த பலி எண்னிக்கை 7,625, ஆந்திராவில் 4912, , டெல்லியில் 4744, உ.பி.யில் 4,429 மேற்கு வங்கத்தில் 3945, குஜராத்தில் 3,210, பஞ்சாபில் 2,356.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தமாக 1,762 பேரும், ராஜஸ்தானில் 1236 பேரும், ஹரியாணாவில் 975 பேரும் தெலங்கானாவில் 974 பேரும், ஜம்மு காஷ்மீரில் 878 பேரும் பிஹாரில் 822 பேரும், ஒடிசாவில் 626 பேரும், ஜார்கண்ட், சட்டிஸ்கரில் முறையே 555 பேரும், அஸாமில் 469, கேரளாவில் 439, உத்தராகண்டில் 414, புதுச்சேரியில் 385, கோவாவில் 290, திரிபுராவில் 200, சண்டிகரில் 93, இமாச்சலில் 77, அந்தமான் நிகோபாரில் 51, மணிபூரில் 46, லடாக்கில் 40, மேகாலயாவில் 26, சிக்கிமில் 14, நாகாலாந்து, அருணாச்சலில் 10, தாதர் அண்ட் நாகர் ஹவேலி, டையு, டாமனில் 2 பேர் என்று மரணித்துள்ளனர்.
பலியாணொரில் 70% பேர் மரணமேற்படுத்தும் ஆபத்தான மற்ற நோய்களைக் கொண்டவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago