பெட்ரோலியத் துறை சார்பில் பிஹாரில் பிரதமர் மோடி நேற்று ரூ.900 கோடி பெறுமான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய்த் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
பிஹார் உட்பட நாட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் சரியான அரசு இருந்தால் மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய முடியும். இதை பிஹார் அரசு கடந்த 15 ஆண்டுகளாக நாட்டுக்கு உணர்த்தி வருகிறது.
» மைசூரு தசரா விழாவை எளிமையாக கொண்டாட முடிவு: 750 கிலோ தங்க அம்பாரியை அபிமன்யூ யானை சுமக்க வாய்ப்பு
» கட்டிடம் இடிப்பு விவகாரத்தில் நீதி கிடைக்கும்: ஆளுநரை சந்தித்த நடிகை கங்கனா ரனாவத் தகவல்
ஒரு காலத்தில் உயர் வகுப்பினர் மட்டுமே சமையல் கேஸ் வைத்திருக்க முடியும், ஆனால் இன்று உஜ்வாலா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.
கல்வி, தொழிலாளர், சுகாதாரம், வருமான வரி என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் நாட்டின் வளர்ச்சிக்கு பிஹாரின் பங்கு பெரியதாகவே இருக்கும்.
அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக பிஹார் உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னர் ஆர்வம் காட்டப்படாமல் இருந்தது. அதை இப்போது மாற்றியுள்ளோம்.
மாநில வளர்ச்சிக்கு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை., என்று பிரதமர் மோடி பேசினார்.
டிசம்பர் 31, 2019-ம் ஆண்டு மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட நீடித்த வளர்ச்சி இலக்கு (எஸ்டிஜி) இந்தியா குறியீடு குறித்து வெளியிட்ட அறிவிப்பில் வளர்ச்சிக் குறியீட்டில் மிக மோசமான நிலையை பிஹாருக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது. இதில் கேரளாதான் முதலிடம் பிடித்திருந்தது.
இதே போல் மார்ச் 8, 2019-ல் வெளியிடப்பட்ட மானுட வளர்ச்சிக் குறியீடு (Human development index)அறிக்கையில் உ.பி., பிஹார் மோசம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago