கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வரும் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகும் என்ற தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. எனினும், கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது பல விதமான தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன.
இந்தச் சூழலில், வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறி ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த அறிக்கை போலியானது என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. மேலும், இனி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட மாட்டாது எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago