கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க புதிய விதிகளை சேர்க்கும் வகையில் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தர் துறையின் கீழ் இந்த மசோதா தேசிய செயல் திட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டிலிருந்து முழுமையாக கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் முறையை நீக்குதல் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
தேசிய செயல்திட்டத்தின் நோக்கத்தின்படி, கழிவுநீர்தொட்டிகளை சுத்தம் செய்ய தற்போதும் நடைமுறைகளை மேம்படுத்துவது, எந்திரங்கள் மூலம் கழுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், அவசர உதவி அமைப்பு போன்றவற்றை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளுதல், கழிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தலுக்கு தடை ஆகியவற்றுக்காக தனியாகச் சட்டம் இயற்றி நடைமுறையில் இருக்கிறது.
இந்த சட்டத்தின்கீழ் ஆபத்தான கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் மனிதர்களை பயன்படுத்தும் நிறுவனம், தனிநபருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் , 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இருப்பினும், ஆண்டுதோறும் நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் இறங்கி, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தொடரந்து நடந்து வருகிறது. இந்த முறையை முழுமையாக நீக்க வேண்டும், அதற்கு ஏற்கெனவே இருக்கும் சட்டத்தை செம்மைப்படுத்தும் நோக்கில் புதிய கடினமான விதிகளைச் சேர்த்து மசோதா அறிமுகமாக உள்ளது.
இதுகுறித்து சமூகநீதித்துறை அதிகாரிகள் கூறுகையில் “ கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்ததடை மற்றும் புனர்வாழ்வு திருத்த மசோதா ஏற்கெனவே இருக்கிறது.
இந்த புதிய மசோதா மூலம் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தலை முழுமையாக எந்திரமாயமாக்குதல், பணியில் அதிகமான பாதுகாப்பு, மனிதர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் விதிகளை கடுமையாக்குதல், சிறைதண்டனை காலத்தை அதிகப்படுத்துதல், அபராதத்தை அதிகப்படுத்துதல், விபத்து ஏதேனும் நடந்தால் இழப்பீடு தொகை போன்றவற்றை அதிகப்படுத்த மசோதா கொண்டு வரப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த மசோதாவுடன் சேர்த்து மொத்தம் 23 மசோதாக்கள் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
46 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago