பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்; இதுதான் கரோனாவுக்கு எதிரான திட்டமிட்ட போரா? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

By பிடிஐ

இந்தியப் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி, 24 சதவீதம் வீழ்்ச்சி அடைய வைத்ததுதான், கரோனாவுக்கு எதிரான திட்டமிட்டு மத்திய அரசு போர்புரிந்து வருகிறதன் அர்த்தமா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா வைரஸைத் தடுப்பதில் மத்திய அரசின் செயல்பாடு, வேலையின்மை ஆகியவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியானபின், மத்திய அரசை விமர்சிக்கும் வேகத்தை ராகுல் காந்தி வேகப்படுத்தியுள்ளார். பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாவை என்ற தலைப்பில் இதுவரை 4 வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் “ கரோனாவுக்கு எதிராக இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் திட்டமி்ட்டு போர் புரிந்து வருகிறது” எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளி்க்கும் விதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் “ கரோனா வைரஸுக்கு எதிராக மோடி அரசு நன்கு திட்டமிட்டு போர் புரிந்து, ேதசத்தின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.

ஆனால், மத்தியஅரசும், ஊடகங்களும் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கின்றன

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 46 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தைக்க கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்