மகாராஷ்டிராவை கரோனா வைரஸ் அடங்காமல் ஆட்டி வைக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 189 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காவலர் மரணமடைந்துள்ளார்.
இதன் மூலம் மகாராஷ்டிரா காவல்துறையில் மொத்த கரோனா பாதிப்பு 18,405 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்னமும் 3,612 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். 14,608 பேர் குணமடைய 185 பேர் மரணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம்தான் இந்தியாவிலேயே கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதில் முதலிடம் வகிக்கிறது. இன்னும் 2,53,100 பேர் அங்கு சிகிச்சையில் இருக்கின்றனர். 6,86,462 பேர் குணமடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 27,787 ஆக அதிகரித்துள்ளது.
» 'கரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது': மே.வங்க மாநில பாஜக தலைவர் அறிவிப்பு
» கரோனா பாதிப்பு முடிந்தாலும், காணொலி மூலம் நீதிமன்றங்கள் இயங்கலாம்: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை
பலி எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் கட்டுக்கடங்காத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 1209. புதிதாக 96,551 பேருக்குக் கரோனா பாதிக்க மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்தது.
இன்னமும் 9 லட்சத்து 43 ஆயிரத்து 480 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 76,271 பேர் கரோனாவுக்கு இறந்து போயுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago