இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

By பிடிஐ


இந்தியாவில் கரோனா வைரஸால் இன்று புதிதாக 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது என்றுமத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா ைவராஸ் புதிதாக 96 ஆயித்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 45 லட்சத்து 62 ஆயிரத்து 414 ஆக அதிரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆறுதல் அளிக்கும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்து 42 ஆயிரத்து 663 ஆக உயர்ந்து, 77.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.68 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,209 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 76 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்போர் வீதம் 1.67 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் தகவலின் படி இதுவரை நாட்டில் 5 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 975 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 63 ஆயிரத்து 542 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 495 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 28 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 64 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 482 ஆக குறைந்துள்ளது.

டெல்லியில் கரோனாவில் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,666 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் நேற்று 15 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 3,164 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் 16,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் ஒரு ஆயிரத்து ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று 129 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 6,937 அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26,292 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 396 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கரோனாவில் 97,338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று மட்டும், 68பேர் உயிரிழந்ததைதயடுத்து, 4,702ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்