கர்நாடகா  அமைச்சருக்கு கரோனா பாசிட்டிவ் 

By ஏஎன்ஐ

கர்நாடகா மாநிலத்தின் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் பிரபு சவுகானுக்குக் கரோனா தொற்று உறுதியானது.

இவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்து கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதை அவரே தெரிவிக்கும் போது, “கரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவில் தெரிந்தது. நான் வீட்டுத் தனிமையில் இருக்கிறேன்” என்று கூறினார்.

ஒரேநாளில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 44 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 95 ஆயிரத்து 735 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 44 லட்சத்து 65 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,172 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 75 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் 128 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 6,808 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்