கடந்த வாரம் காணாமல் போன 5 அருணாச்சல் இளைஞர்கள் வழிதவறி சீனா சென்றதாக தகவல்: இந்தியா அழைத்துவர நடவடிக்கை

By செய்திப்பிரிவு

அருணாச்சல பிரதேச மாநிலம் உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை கடந்தவெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தியதாகவும் செய்திகள் வெளியானதால் பதற்றம்ஏற்பட்டது. இந்நிலையில் 5 இளைஞர்களும் வழிதவறிச்சீன பகுதிக்குள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்திய ராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீனா ராணுவம்பதிலளித்துள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளைஞர்கள் தங்கள்பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறும்போது, "காணாமல் போன 5 அருணாச்சல பிரதேச இளைஞர்கள் இருக்கும் இடம் குறித்து இன்று சீன ராணுவத்திடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களை விரைவில் அழைத்து வருவதற்கு நிலையான செயல்பாட்டுநடைமுறைகள் பின்பற்றப்படு கின்றன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்