முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவனம் கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பயன்படுத்த வசதியாக ரெம்டெசிவர் மருந்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ரெடிக்ஸ் என்ற பெயரில் இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெம்டெசிவர் மருந்துக்கான காப்புரிமையை கிலெட் சயின்சஸ் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனத்துடன் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மருந்தை தயாரித்து விற்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தியா உட்பட 127 நாடுகளில் விற்பனை செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ரெம்டெசிவர் மருந்து தயாரிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. ரெடிக்ஸ் மருந்து 100 மில்லி கிராம் மருந்து குப்பியாக கிடைக்கும். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவும் விதமாக இந்த மருந்தை தயாரித்துள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago