இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 61 சதவீதம் பேர் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
குணமடைந்தோர் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் முன்னேற்றறம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 74,894 ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,98,844 -ஐ எட்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் 77.77 %-மாக உயர்ந்துள்ளது. வார அடிப்படையிலான குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஜூலை 3வது வாரத்தில் 1,53,118 ஆக இருந்த குணமடைந்தோர் எண்ணிக்கை, செப்டம்பர் முதல் வாரத்தில் 4,84,068 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,97,394.
சிகிச்சை பெறுபவர்களில் 61%பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago