இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 90 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 43 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கன்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 ஆயிரத்து 706 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 43 லட்சத்து 70 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆறுதல் தரும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 98 ஆயிரத்து 844 ஆக உயர்ந்து, 77.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
» கேரளாவில் ஆம்புலன்ஸுக்கு கட்டுப்பாடு
» கேரள தங்கக் கடத்தல் வழக்கின் முக்கியமான குற்றவாளி ஸ்வ்பனா சுரேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 97 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.53 சதவீதமாக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,115 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 73 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்போர் வீதம் 1.69 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று அதிகபட்சமாக 380 பேர் உயிரிழந்தனர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 146 பேர், தமிழகத்தில் 87 பேர், ஆந்திராவில் 73 பேர், உத்தரப் பிரதேசத்தில் 71 பேர், பஞ்சாப்பில் 67 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் 57 பேர், ஹரியாணாவில் 25 பேர், மத்தியப் பிரதேசத்தில் 20 பேர், டெல்லியில் 19 பேர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்டில் தலா 14 பேர், குஜராத், ஒடிசா, கேரளா, ராஜஸ்தானில் தலா 13 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா 12 பேர், கோவாவில் 11 பேர், தெலங்கானாவில் 10 பேர், திரிபுராவில் 9 பேர், அசாமில் 8 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேர், பிஹார், சண்டிகரில் 4 பேர், சிக்கிமில் 2 பேர், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி இதுவரை 5 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 677 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 54 ஆயிரத்து 549 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 27 ஆயிரத்து 407ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 87 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவில் நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,618 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் நேற்று 13 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 3,133 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் 16,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 96 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று 146 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 6,680 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,280 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 372 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனாவில் 96,769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று மட்டும், 73 பேர் உயிரிழந்ததைதயடுத்து, 4,560 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago