கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நவி மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த ஹெச்.ஏ.சௌத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், நடிகை ராகினி திவேதி உட்பட 15 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர்.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காட்டன்பேட்டை போலீஸார் சிவ பிரகாஷை முதல் குற்றவாளியாகவும், நடிகை ராகினி திவேதியை 2-ம் குற்றவாளியாகவும் சேர்த்துள்ளனர். ராகினி திவேதியின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, பெங்களூரு மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ராகினியின் காவலை 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என போலீஸார் கோரினர். இதையடுத்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள தொழிலதிபர் நியாஸ் உள்ளிட்ட 5 பேரை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.ராகினி திவேதி
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago