முல்லைப்பெரியாறு அணைப்பாதுகாப்பு; அறிக்கை தாக்கல் செய்ய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு

By செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள், பழுது நீக்கும் பணிகள் 'அணை பாதுகாப்பு, பராமரிப்பு வழிகாட்டு நெறிமுறைகள்' அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறாதா? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக்குழுவை கலைக்க வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப், ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் ஆகியோர் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக்குழுவை கலைக்க வேண்டும்.

அணை பாதுகாப்பு பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு குழு அதன் பணியை அதை விட குறைந்த அதிகாரம் கொண்ட குழுவுக்கு பகிர்ந்தளிக்கக்கூடாது. பிரதான கண்காணிப்பு குழுவே முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக பருவ மழை காலங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வை நேரடியாக சென்று செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்குவது, தேக்கப்படும் நீர் பகிர்ந்தளிப்பு, நீர் திறப்பு விகிதம் மற்றும் அணையை திறப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் விரைவாக ஒரு திட்டத்ததை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

கடந்த 2014 முதல் தற்போது வரை 13 முறை மேற்பார்வைக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டும் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, “முல்லைப்பெரியாறு அணையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் விவரங்கள் தொடர்பாகவும், முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகள் என்ன? அவை ஏன் முடிக்கப்படாமல் எதனால் தாமதப்படுகிறது ?

முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள், பழுது நீக்கும் பணிகள் மத்திய நீர் ஆணையம் கடந்த 2018-ல் வெளியிட்ட 'அணை பாதுகாப்பு, பராமரிப்பு வழிகாட்டு நெறிமுறைகள்' அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறாதா? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் கோரியுள்ளனர்.

இந்த மனு நாளை மறுநாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

58 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்