தேசிய கல்விக் கொள்கை 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.
பள்ளக் கல்வி மற்றும் உயர்கல்வியில் மாற்றங்களைச் செய்து உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் புதிய தேசியக் கல்விக்கொள்கையை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய புதிய தேசியக் கொள்கைக்கு பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள அதை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக இருந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக "உயர்கல்வி மேம்பாட்டில் தேசியக் கொள்கையின் பங்கு" எனும் தலைப்பில் ஆளுநர்கள் மாநாட்டுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச கல்வி அமைச்சர்கள் மாநில ஆளுநர்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தேசிய கல்வி கொள்கை 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப இந்தியாவை வழிநடத்தி செல்லும் என்று தெரிவித்தார்.
"தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மாநிலங்களில் அமல்படுத்துவதற்கு, அதை சார்ந்த மெய்நிகர் மாநாடுகளை நடத்த ஆளுநர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். புதிய கல்வி கொள்கையின் பல்வேறு கூறுகளைப் பற்றி விரிவாக ஆலோசித்த பிறகு, ஆலோசனைகளை கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பலாம்," என்று கோவிந்த் தெரிவித்தார்.
இந்திய மொழிகள், கலை மற்றும் கலாச்சாரத்துக்கு தேசிய கல்வி கொள்கை 2020-இல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய குடியரசு தலைவர், படைப்பாற்றலை மாணவர்களிடயே இது மேம்படுத்தில், இந்திய மொழிகளையும், இந்திய ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்றார்.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் ஒருங்கிணைத்தல் மூலம் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி சிறந்த விளைவுகள் எட்டப்பட வேண்டும். இதற்காக, தேசிய கல்வி கொள்கை பேரவை உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய இளைஞர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்ய தேசிய கல்வி கொள்கை உதவும் என்றும் 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப அது செயல்படுத்தப்படும் என்றும் குடியரசு தலைவர் மேலும் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago