பாஜக வரலாற்றில் ஏழாவது முஸ்லிம் எம்.பி.: மாநிலங்களவைக்கு ஜபர் இஸ்லாம் போட்டியின்றித் தேர்வு  

By ஆர்.ஷபிமுன்னா

நாடாளுமன்ற மாநிலங்களவையின் இடைக்கால உறுப்பினராக ஜபர் இஸ்லாம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இவர் பாஜகவின் வரலாற்றில் தேர்வான ஏழாவது முஸ்லிம் எம்.பி. ஆவார்.

உத்தரப் பிரதேசம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக சமாஜ்வாதி கட்சி அமர்சிங்கைத் தேர்வு செய்திருந்தது. இவரது சமீபத்திய மறைவால் அமர்சிங்கின் மீதமுள்ள நவம்பர் 2022 வரையிலான பதவிக்காலம் காலியானது.

உ.பி.யில் இதற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் உறுப்பினராக பாஜக சார்பில் டாக்டர் சையது ஜபர் இஸ்லாம் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து மற்ற இருவர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.

இவர்களில் ஒருவர் மனு செல்லாதது என அறிவிக்கப்பட்டிருந்தது. மற்றவர் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் ஜபர் இஸ்லாம் போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் ஊடகப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற டாக்டர் சையது ஜபர் இஸ்லாம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், மும்பையில் ஜெர்மனியின் டச் வங்கியின் இயக்குநராகப் பணியாற்றியவர்.

மகராஷ்டிர பாஜகவில் கடந்த ஏழு வருடங்களாக முக்கியப் பங்காற்றியவர். 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரக் குழுவிலும் இடமளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் பாஜக முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் அமர, ஜபர் ஒரு முக்கியக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் அவரது நெருங்கிய நண்பரான காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தது பேசப்படுகிறது.

பாஜக, இதைப் பாராட்டும் வகையில் ஒரு முஸ்லிமான ஜபர் இஸ்லாமை உ.பி. சார்பில் மாநிலங்களவையின் இடைக்கால உறுப்பினராக்கி உள்ளது. பாஜக வரலாற்றில் நாடாளுமன்ற எம்.பி.யாக்கப்பட்டுள்ள ஏழாவது முஸ்லிமாக ஜபர் இடம் பெற்றுள்ளார்.

ஜபருக்கு முன்பாக பாஜகவில் முக்தார் அப்பாஸ் நக்வீ, எம்.ஜே.அக்பர், நஜ்மா ஹெப்துல்லா, ஷானாவாஸ் உசைன், சிக்கந்தர் பக்த் மற்றும் ஆரிப் உசைன் ஆகியோர் எம்.பி.க்களாக இருந்தனர். மாநிலங்களவைக்கு சிக்கந்தர் பக்த், எம்.ஜே.அக்பர், நஜ்மா ஹெப்துல்லா மற்றும் முக்தார் அப்பாஸுக்கு பின் ஜபர் ஐந்தாவது முஸ்லிம் எம்.பி.யாகி உள்ளார்.

முஸ்லிம்கள் அதிகம் விரும்பாத கட்சியாகக் கருதப்படும் பாஜகவில் 2019 மக்களவைத் தேர்தலில் அம்மதத்தினர் ஏழு பேர் போட்டியிட்டனர். ஆனால், ஒருவரால் கூட இதில் வெற்றி பெற முடியவில்லை.

ஜபருக்கு கரோனா தொற்று

இதனிடையே, ஜபர் இஸ்லாமிற்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர், டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜபர் சார்பில் ஜே.பி.எஸ்.ராத்தோர் என்பவர் பெற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்