நாடுமுழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் இன்று அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு சிறப்பு ரயில்கள் ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும் சாதாரண பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் முதல்கட்டமாக செப்டம்பர் 7ம் தேதி 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை, செங்கோட்டை உட்பட பல பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
» வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்கள்: உணவு, உடை கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்
இதனிடையே செப்டம்பர் 12-ம் தேதி முதல் நாடுமுழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதற்காக முன்பதிவு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என ரயில்வே வாரிய தலைவர் விநோத் குமார் யாதவ் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago