அருணாச்சலப் பிரதேச கிராமம் ஒன்றில்  5 பேரைக் காணவில்லை: சீன ராணுவம் கடத்தியதாகப் பரபரப்புப் புகார்

By பிடிஐ

லடாக்கில் இந்திய-சீன ராணுவங்கள் பதற்றமான சூழ்நிலையில் இருந்து வரும் நிலையிலும் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையே மாஸ்கோவில் பேச்சு வார்த்தை நடந்த நிலையிலும் அருணாச்சலப் பிரதேசம் எல்லை கிராமம் ஒன்றில் 5 பேரை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால் சீன ராணுவம் பொதுவாக காடுகளில் வேட்டைக்குச் செல்லும் நபர்கள் பொதுவாகவே கணிக்க முடியாத எல்லையைக் கடந்து செல்லும் போது அவர்களைக் கொண்டு சென்று பிறகு விடுவிப்பது சகஜமான ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.

எனினும் இது தொடர்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி போலீஸ் உயரதிகாரி கேனி பக்ரா கூறும்போது, “தாகின் இனத்தைச் சேர்ந்த 5 பேரைக் காணவில்லை என்று சமூக ஊடகம் மூலம் அறிந்தோம். நாச்சோ காட்டில் இவர்களை சீன ராணுவம் கடத்தியிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. ஆனால் காணாமல் போனவர்கள் குடும்பத்தினரிடமிருந்து புகார்கள் எதுவும் தரப்படவில்லை.

இவர்கள் சீன ராணுவம் கடத்தியதா என்பதை உறுதி செய்ய ராணுவத்துடன் பேச்சில் இருந்து வருகிறோம், ஏனெனில் பொதுவாக சீன் ராணுவம் இப்படிப் பிடித்துச் செல்லும் பிறகு விட்டுவிடும்” என்றார்.

ஆனால் எல்லை ராணுவ அதிகாரிகள் காணாமல் போனவர்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். நாச்சோ என்ற கிராமத்தில் 400 பேர்தான் வசிக்கின்றனர், ஆனால் இங்கு போலீஸ் நிலையம் உண்டு. இப்படி கடந்த மாதம் கடத்திய ஒருவரை பிற்பாடு பேச்சுவார்த்தைக்குப்பிறகு சீன ராணுவம் விடுவித்துள்ளது.

ஆனால் இந்த முறை அனைத்திந்திய அருணாச்சலப் பிரதேச மாணவர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, “கரோனா உருவாக்கிய வேதனைகள் போதாதென்று சீன ராணுவம் மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள் எங்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. எல்லைப்பகுதியில் அமைதியாக வாழும் மக்களை அவர்கள் இப்படித்தான் துன்புறுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்