பிஹார் பேரவைத் தேர்தல்: மாஞ்சி 2 தொகுதிகளில் போட்டி

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர், இந்த முறை அனைத்து அரசியல் கட்சிகளிலும் இவ்வாறு போட்டியிடும் ஒரே வேட்பாளராக இருக்கிறார்.

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 23 ஆவது முதல்வராக இருந்தவர் ஜிதன் ராம் மாஞ்சி. தனது பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா எனும் பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியை ஊருவாக்கியவர். மத்தியில் பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக இணைந்தார். இதில் தம் பங்கில் இரு தொகுதிகளில் முதல் முறையாக போட்டியிடுகிறார் மாஞ்சி.

ஜெஹனாபாத்தின் மக்தூம் மற்றும் கயாவின் இமாம்கன்ச் ஆகிய இவ்விரண்டு தொகுதிகளுமே மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு உள்ளான தொகுதிகள் ஆகும். இதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மக்தூம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மாஞ்சி, கடந்த மக்களவை தேர்தலில் கயாவின் தொகுதியில் போட்டியிட்டு பாஜக உறுப்பினர் ஹரி மாஞ்சியிடம் தோல்வி அடைந்தார், இந்த முறை கயாவின் இமாம்கன்ச்சில் மாஞ்சியை எதிர்த்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுபவர் முன்னாள் சபாநயகரான உதய் நாராயண் சௌத்ரி.

இவரை போல் இரு தொகுதிகளில் கடைசியாக போட்டியிட்டவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவி ஆவார். பிஹாரின் மஹா தலித் சமூகத்தின் தலைவராகக் கருதப்படும் மாஞ்சி தன் தோல்விக்கு பயந்து இரு தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து 'தி இந்து'விடம் பேசிய இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் செய்தி தொடர்பாளர் டானிஷ் ரிஜ்வான் கூறுகையில், "முதல்வராக இருந்த மாஞ்சி பதவி ஜனநாயகத்திற்கு விரோதமாக பதவி இழக்கக் காரணமாக இருந்தவர் இந்த உதய் நாரயண். இவரை தோற்கடிப்படிப்பது பாஜக தலைவர் அமித்ஷாவின் விருப்பம். எனவே, அவரை எதிர்க்க மாஞ்சி இரண்டாவது தொகுதியாக இமாம்கன்ச்சை தேர்ந்தெடுத்துள்ளார்" எனக் கூறினார்.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக தனக்காக 160, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்திக்கு 40, உபேந்தர் குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய சமதா கட்சிக்கு 23 மற்றும் இந்திஸ்தானி அவாம் மோர்ச்சாவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. இவற்றில் தனது அவாமி மோர்ர்ச்சாவிற்கான அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார் மாஞ்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்