டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக தலைவர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெற அரசுத் தரப்பு வழக்குகள் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் இறுதி முடிவுக்காக காத்துள்ளது.
டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் ராக்கி பிர்லான் உள்ளிட்ட பலர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன.
அதேபோல் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக பாஜக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தா, டெல்லி எம்.பி.க்கள் விஜய் கோயல், பர்வேஸ் வர்மா மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ முகேஷ் சர்மா ஆகியோர் மீதும் பல்வேறு வகை கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை வாபஸ் பெறுவது என டெல்லியின் அரசு வழக்குகள் இயக்குநரகத்தின் உயர்நிலைக்குழு கடந்த வாரம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு அக்குழுவின் இயக்குநர் பங்கஜ் சாங்கி, உள்துறை செயலாளர் எஸ்.என்.சஹாய், சட்டத்துறை செயலாளர் ஆர்.கிரண்நாத் மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
35 கிரிமினல் வழக்குகள்
இது குறித்து ‘தி இந்து’விடம் அக்குழுவின் வட்டாரம் கூறும்போது, “இந்த 8 அரசியல் தலைவர்கள் மீதான 35 கிரிமினல் வழக்குகளும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவரது அனுமதிக்குப் பிறகு தான் டெல்லி நகர நீதிமன்றங்களில் இவற்றை வாபஸ் பெற விண்ணப்பிக்கப்படும். டெல்லி நகரவாசிகளின் பொதுநலம் கருதி நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என்பதால் அவை வாபஸ் பெற தகுதி பெற்றுள்ளன” என்று தெரிவித்தனர்.
வாபஸ் பெறவேண்டி இக்குழு முன் சுமார் 50 வழக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வாபஸ் பெறுவதற்கு குழு பரிந்துரை செய்தவற்றில் பல முக்கிய வழக்களும் இடம் பெற்றுள்ளன. கேஜ்ரிவால் தனது முந்தைய ஆட்சியில் ரயில் பவன் முன்பாக டெல்லி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தர்ணா செய்தார்.
அப்போது அரசு அலுவலர் களை பணியாற்ற விடாமல் தடுத்ததாக அவர் மீது பதிவான வழக்கும் உள்ளது. இதற்கும் முன் கேஜ்ரிவால் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ எனும் பெயரில் நடத்திய போராட்டத்தில் பதிவான வழக்குகளும் அதில் அடங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
53 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago