டெல்லியில் டெங்கு காய்ச்சலால் கடந்த ஆகஸ்ட் வரை பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, டெல்லியில் கொசுக்கள் உருவாகும் பகுதி களாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் வீடு, குடியரசுத் தலைவர் மாளிகை, 5 வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட 92 இடங்கள் மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டு நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்துக்குப் பின் டெங்கு பரவுவது வழக்கம் என்றாலும், இந்தமுறை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி வரை இதனால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநகராட்சி புள்ளிவிவரப்படி இதில், கடைசி 20 நாட்களில் மட்டும் 250 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பாலஸ்தீன தூதரக செயலாளர் அப்து எல்ரசாக் அபு ஜசார் மற்றும் அவரது இரு மகன்கள் அஷ்ரப் (23), அம்ஜத் (16) ஆகியோரும் அடங்குவர். இம்மூவரும் சாணக்யபுரியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் டெங்கு வால் பாதிக்கப்பட்டு, டெல்லியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 115 ஆக உள்ளது.
டெங்கு காய்ச்சல், கொசுக் களால் பரவுவதால் டெல்லியில் அவை உருவாகும் பகுதிகளை அடையாளம் கண்டு ஒழிக்கும் பணியில் மாநகராட்சி இறங்கி யுள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் எண் 9, அசோகா சாலை வீட்டின் பின்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் அவருக்கு டெல்லி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதே பிரச்சினைக்காக குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பல நூறு ஏக்கர் அளவில் பரவியுள்ள சில நிலப்பகுதி, டெல்லியில் எத்தியோப்பியா, செக் குடியரசு, கானா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் உட்பட 92 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “டெல்லியின் விவிஐபி.கள் வாழும் பகுதிகள் உட்பட கொசுக்கள் உருவாகும் அனைத்து இடங்களும் அடை யாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை 3,408 நோட்டீஸ்கள் விடப்பட்டுள்ளன. 179 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களினால் பரவும் நோய்களை தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்” என்றனர்.
டெல்லியில் கடந்த 5 ஆண்டு களில் டெங்குவால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்த அரசின் புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது. இதன்படி 2014-ல் 33, 2013-ல் 162, 2012-ல் 13, 2011-ல் 73, 2010-ல் 1000 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஆகஸ்ட் வரை 830 ஆக பதிவாகி உள்ளது.
டெல்லியில் உள்ள எத்தியோப்பியா, செக் குடியரசு, கானா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் உட்பட 92 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago