இந்தியாவில் கரோனா பரிசோதனைகள் அதிகரித்திருந்தாலும் அதில் பாசிட்டிவ் ஆகும் விகிதம் 7.5% க்கும் குறைவு என்றும் மொத்தமாக பாசிட்டிவ் விகிதம் 8.5%-க்கும் குறைவு என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இருநாட்கள் சோதனை செய்யப்பட்ட சாம்பிள்கள் 11.70 லட்சமாகும். மொத்தமாக சோதனை செய்யப்பட்ட சாம்பிள்கள் 4 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. மாதிரிகள் பரிசோதனையில் பெரிய அளவில் முன்னேற்றம் இருந்தாலும் அதன் மூலம் தெரியவரும் கரோனா பாசிட்டிவ் தொற்று விகிதம் 7.5%க்கும் கீழ்தான் என்கிறது சுகாதாரத்துறை
ஒட்டுமொத்த சாம்பிள்கள் சோதனைகளில் பாசிட்டிவ் என்று தெரியவருவது 8.5%க்கும் குறைவுதான்.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 37 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடையும் விகிதம் 77.15% ஆக அதிகரித்துள்ளது. மரண விகிதம் 1.74% ஆகக் குறைந்துள்ளது
“மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் உத்தியான சோதனை, தடம் காண்டல், சிகிச்சை என்ற பார்முலாவைக் கடைப்பிடித்ததன் பிரதிபலிப்பே இந்த முடிவுகள். வேறு எந்த நாடும் இந்த எண்ணிக்கையில் தினசரி கரோனா பரிசோதனைகளைச் செய்வதில்லை.” என்று சுகாதாரத்துறை அடிக்கோடிட்டு சொல்கிறது,
நீடித்த முறையில் அதிக அளவில் மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதுதான் முன் கூட்டிய நோய்க்கணிப்பு, சரியான நேரத்தில் தனிமைப்படுத்தல், மற்றும் காலம் தவறாத மருத்துவமனை அனுமதி ஆகியவற்றை சாத்தியமாக்கியுள்ளன.
வீடுகளில் தனிமைப்படுத்துவோரைக் கண்காணித்தல் மற்றும் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை நடைமுறைகள் அடிப்படையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதில்தான் மரண விகிதத்தைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
கரோனா மரண விகிதத்தை 1%-க்கும் கீழ் கொண்டு வருவதான நோக்கத்தில் இந்தியாவின் தற்போதைய மரண விகிதம் 1.74% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தினசரி மாதிரிகள் சோதனைத்திறன் 10 லட்சத்துக்கும் கூடுதலாக்கப்பட்டுள்ளது. வியாழனன்ரு 11 லட்சத்து 69 ஆயிரத்து 765 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த அதிகரிப்பின் மூலம் மொத்தப் பரிசோதனைகள் எண்ணிக்கை 4.7 கோடியாக அதிகரித்துள்ளது. இன்றைய தேதி வரை மொத்த கரோனா பரிசோதனைகள் 4 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 145 ஆக உள்ளது.
நாடு முழுதும் சோதனை நிலையங்களின் வலைப்பின்னல்கள் விரிவாக்கம் செய்ததனால் இந்த அளவுக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இன்றைய தேதியில் 1,631 சோதனை நிலையங்கள் உள்ளன. இதில் அரசு சோதனை நிலையங்கள் 1,025, தனியார் 606.
இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 83,341 பேர் புதிதாகக் கரோனாவுக்குப் பாதிக்கப்பட, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 747 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 68,742 ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 1096 பேர் கோவிட்டுக்கு மேலும் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago