இந்தியாவில் ஒரே நாளில் 83,341 பேருக்கு புதிதாகக் கரோனா வைரஸ் தொற்ற மொத்த பாதிப்பு எண்னிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் பலி எண்ணிக்கை 1096 ஆக மேலும் அதிகரிக்க மொத்த பலி எண்ணிக்கை 68,742 ஆக உள்ளது. ஆறுதல் தரும் செய்தியாகக் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்து குணமடையும் விகிதம் 77.15% ஆக உள்ளது.
கரோனா இறப்பு விகிதமும் மேலும் குறைந்து 1.74 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் தற்போது 8 லட்சத்து 31 ஆயிரத்து 124 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் 21.11% ஆகும்.
இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7ம் தேதி 20 லட்சத்தையும் ஆகஸ்ட் 23ம் தேதி 30 லட்சத்தையும் கடந்து சென்றது.
ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தம் 4 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 145 சாம்பிள்கள் இதுவரை சோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 11,69,765 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் கூறும் போது ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களின் கரோனா பாதிப்பு மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கையில் 70% ஆகும். கர்நாடகா, டெல்லியில் தினசரி இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 1096 பேர் கரோனாவுக்கு பலியானதில் மகாராஷ்ட்ராவில் மட்டும் 391 பேர் பலியாக அங்கு மொத்த பலி எண்ணிக்கை 25,586 ஆக உள்ளது. கர்நாடகாவில் பலி எண்ணிக்கை மேலும் 104 என அதிகரிக்க அங்கு மொத்த பலி எண்ணிக்கை 6054 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 92 அதிகரிக்க மொத்த இறப்பு எண்ணிக்கை 7,608 ஆக உள்ளது. ஆந்திராவில் 72 பேர் பலியாக மொத்த இறப்பு எண்ணிக்கை 4,200 ஆக உள்ளது. டெல்லியில் 19 பேர் பலியாக அங்கு இதுவரை 4500 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
குஜராத்தில் 16 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 3062 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 3,691 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 55 பேர் பலியாக இறப்பு விகிதம் 3,394 ஆக உள்ளது. பஞ்சாபில் ஒரே நாளில் 72 பேர் பலியாக இறப்பு எண்ணிக்கை 1690 ஆக உள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago