பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் கூட்டணியில் இறுதி தொகுதிப் பங்கீடு விவரம் நேற்று வெளியிடப்பட்டது.
பிஹார் சட்டப்பேரவையின் பலம் 243 ஆகும். இதில் ஜேடியு, ஆர்ஜேடி தலா 100 தொகுதிகளிலும் காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேசியவாத கூட்டணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த அந்த கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி ஜேடியு, ஆர்ஜேடி தலா 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஐக்கிய ஜனதா தள மாநிலத் தலைவர் வசிஷ்ட நாராயண சிங் பாட்னாவில் நேற்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago