இந்தியாவில் 83,833 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: ஒரே நாளில் 68,584 பேர் கரோனாவில் இருந்து மீண்டனர்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 83 ஆயிரத்து 833 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 68,584 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரத்து 833 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.01 லட்சத்திலிருந்து 29.70 லட்சமாக அதிகரித்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 68,584 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்த 8.15 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,043 பேர் உயிரிழந்தனர்.கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66,333 லிருந்து 67,376 ஆக உயர்ந்துள்ளது. . இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.76% குணமடைந்தோர் விகிதம் 76.98% ஆக உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 25 ஆயிரத்து 195ஆக அதிகரித்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7,516 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,481ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்