கரோனா தொற்று: மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் அப்பாஜி கவுடா மரணம்

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா காலமானார். அவருக்கு வயது 67.

நாடுமுழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆளாகி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உட்பட பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிசைக்கு பின்னர் அவர்கள் குணமடைந்தனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதி தொகுதி முன்னாள் எம்எல்ஏவான அப்பாஜி கவுடாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்கு கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்