‘பி.எம்.கேர்ஸ்’ நிதியம் தொடங்கிய 5 நாளில் ரூ.3,076 கோடி நன்கொடை: தணிக்கை அறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு சார்பில் ‘பி.எம். கேர்ஸ்’ நிதியம் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெறும் நோக்கில் இது ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த நிதியம்தொடங்கப்பட்ட 5 நாட்களில் அதில் ரூ.3,076 கோடி செலுத்தப்பட்டிருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பி.எம். கேர்ஸ்’ வலைதளத்தில் மக்களின் பார்வைக்காக இது வெளியிடப்பட்டுள்ளது.

5 நாட்களில் கிடைக்கப்பெற்ற தொகையான ரூ.3,076 கோடியில் ரூ.3,075.85 கோடி உள்நாட்டில் இருந்தும், ரூ.39.67 லட்சம் வெளிநாடுகளில் இருந்தும் வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த நிதியத்துக்குநன்கொடை வழங்கியவர்களின்பெயர் வெளியிடப்படவில்லை.

பெயர் வெளியிட வேண்டும்

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில், “நாட்டில் உள்ளதன்னார்வத் தொண்டு நிறுவனங் களும், அறக்கட்டளைகளும் தங்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நிதி வழங்கிய நன்கொடை யாளர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அப்படியிருக்கும்போது, ‘பி.எம். கேர்ஸ்’ நிதியத்துக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு வழங்கப்படுவது ஏன்? நிதியையார் பெறுகிறார்கள் என்பதுஅனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பின்னர் நிதி வழங்குபவர் கள் பெயர்களை வெளியிட அரசுஏன் அஞ்சுகிறது?” என பதிவிட்டுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்