கரோனா வைரஸால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது, சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தியது போன்ற காரணங்களால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 1-ம்தேதி நிலவரப்படி 14.2 கிலோ எடையுள்ள மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலையும், மானியமில்லா சிலிண்டர் விலையும் ரூ.594 ஆக இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தின் (டிபிடி) கீழ் பயனாளிகளின் கணக்கில் அரசு இனி மானியம் செலுத்த வேண்டியதில்லை என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கி ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில் மானியத்துடன் கூடிய, மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஏறக்குறையே சமமாக வந்துவிட்டது. அதனால், கடந்த 4 மாதங்களாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசு எந்தவிதமான மானியத்தொகையையும் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
எல்பிஜி மானியத்தை நிறுத்தியிருப்பதன் மூலம் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ஏறக்குறைய ரூ.20 ஆயிரம் கோடி மிச்சமாகும். கரோனா நிவாரணத் திட்டங்களுக்கு இந்தப் பணத்தைத் திருப்பிவிட முடியும்.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பெட்ரோலியம் மானியத்துக்காக ரூ.40,915 கோடி ஒதுக்கியது.
இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட 6 மடங்கு அதிகமாகும். இந்த ஒதுக்கீட்டுத் தொகை தவிர்த்து, எல்பிஜி மானியம் நடப்பு நிதியாண்டில் ரூ.37,256.21 கோடியாக உயர்த்தப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுவரை ரூ.1900 கோடி மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது.
சமையல் கேஸ் மானியம் ரத்து செய்யப்படுவதற்கு முக்கியக் காரணம், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் படுமோசமாக வீழ்ச்சி அடைந்ததுதான்.
இருப்பினும் அந்தப் பலன்களை நுகர்வோர்களுக்கு வழங்காமல், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின, சமையல் கேஸ் சிலிண்டர் விலைையயும் உயர்த்தின. இதனால் கடந்த ஆண்டில் சிலிண்டர் விலை ரூ.494.35 ஆக இருந்தது, தற்போது ரூ.594 ஆக இருக்கிறது.
எம்கே குளோபல் நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் 27.76 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இதில் 1.50 கோடி வாடிக்கையாளர்கள் மானியம் பெறத் தகுதியில்லாதவர்கள், அதாவது இவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்கள்.
26.12 கோடி வாடிக்கையாளர்கள்தான் மானியத்தை நேரடி வங்கிக்கணக்கில் பெறத் தகுதியானவர்கள். இதில் 18 கோடி பேருக்கு கடந்த சில மாதங்களாக மானியம் கிடைக்கவில்லை.
தற்போதுள்ள நிலையில்,கரோனா காலத்தில் இலவசமாக சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பெற்ற 8 கோடி பயனாளிகள் கணக்கிற்கு மட்டுமே ரூ.9,709.86 கோடியைச் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சில மாதங்களில் நடந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றால், மானியத்தை முழுமையாக நிறுத்திவிட்டு, அந்தத் தொகையை மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு மாற்றியுள்ளது மத்திய அரசு.
ஒருவேளை வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகாித்து, அதன் மூலம் சமையல் சிலிண்டர் விலை அதிகரித்தால், அந்த விலை உயர்வு, நுகர்வோர்கள் தலையில்தான் சுமத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago