நாட்டின் பொருளாதார சீரழிவு, கரோனா வைரஸ் பாதிப்பு, எல்லையில் மோதல் என பிரமதர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் தேசம் தத்தளிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பது, எல்லையில் பதற்றம் ஆகியவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் வீழ்ச்சி அடைந்ததாக தெரிவித்திருந்தது. பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் மீண்டும் குற்றச்சாட்டுகளை வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று விமர்சித்துட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
» 1504 கிமீ, 1,856 கிமீ சரக்கு வழித்தடம்: விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவு
அதில் அவர் கூறுகையில் “ மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது.
(1.) வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
(2.) 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.
(3.) 12 கோடி வேலையிழப்புகள்.
(4) மத்திய அரசு தனது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்குச் செலுத்தவில்லை.
(5) உலகிலேயே மிகஅதிகமாக நாள்தோறும் புதிதாக கரோனா நோயாளிகள் உருவாகி வருகிறார்கள்.
(6) எல்லையில் வெளிநாட்டுப் படைகளின் அத்துமீறல் இருந்து வருகிறது.
இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக பாஜக சார்பில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்றக் கோரி 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்களே அதைப்பற்றி ராகுல் காந்தி வீடியோ வெளியிட வேண்டும் என்று கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago