காற்றில் பறந்த சமூக இடைவெளி 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஹைதராபாத் ஏரிகளில் கரைப்பு

By என்.மகேஷ்குமார்

ஒவ்வொரு ஆண்டும் மும்பைக்குஅடுத்தப்படியாக ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக வீதிகளில் அதிகமாக விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடை விதித்தது. இதனால் குறைந்த அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

கடந்த 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட சிலைகளை, 10-ம் நாளான நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கெனவே சுமார் 30 ஆயிரம் சிலைகள் ஆங்காங்கே ஏரிகளில் கரைக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் சிலைகள் ஏரிகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சிலைகளை கரைக்க நெக்லஸ் ரோடில் உள்ள ‘டேங்க் பண்ட்’ பகுதியில் 21 ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அசம்பாவிதம் ஏதும் நடைபெறாதவாறு 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே பல இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏரிகளில் கரைக்கும் பணிகள் தொடங்கின.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். அனைவரும்முகக் கவசம் அணிந்திருந்தனர். ஆனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறி விட்டனர்.போலீஸார் ஆங்காங்கே கரோனாவைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்